மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு..

மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம், இன்று (05/02/2019) சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில்
மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ  தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹளரத் துஆ செய்து கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில செயலாளர்  மவ்லவி அர்ஷத் அஹமத் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை  தொகுத்து வழங்கினார்.  மாநிலப் பொதுச் செயலாளர்  மௌலவி M.S சம்சுல் இக்பால் தாவூதி இரண்டு ஆண்டுகளுக்கான பொதுக்குழு அறிக்கையை சமர்ப்பித்து பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்றார். தேசிய  பொருளாளர்  மௌலவி  உஸ்மான் பெய்க்  ரஷாதி  மற்றும்  தேசிய பொதுச்செயலாளர்  மவ்லவி பைசல் அஷ்ரஃபி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து   (2019-2020) ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகளின் தேர்தலை நடத்தினர்.
இப்பொதுக்குழு கூட்டத்தில்  தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி, துணை தலைவர்கள் மீரான் முஹ்யித்தீன் அன்வாரி, முஹம்மது யஹ்யா தாவூதி, மாநில பொதுச்செயலாளராக ஆபிருத்தின் மன்பா, மாநில செயலாளர்கள் அர்ஷத் அஹ்மத் அல்தாபி, அப்துல் காதர் ஹஸனி, பொருளாளர் செய்யது இப்ராஹீம் உஸ்மானி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது அபூபக்கர் சித்திக் ரஷாதி, செய்யது முஹம்மது உஸ்மானி,முஹம்மது நாபிஈ, அப்துல்லாஹ் ஸஆதி, ஷவ்கத் அலி உஸ்மானி, முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்தி:- கனகராஜ், மதுரை