திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி யில் கள்ள சாராயம் அருந்திய இரண்டு பேர் மரணம் !..

இன்று காலை (05/12/2018) 5மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ளப்பட்டியில் கள்ள சாராயம் குடித்த முருகன்,  சமயன், தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேரும் உயிருக்கு போராடிய நிலையில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதை அடுத்து இரண்டு பேரை T.வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில் சமயன் உயிர் இழந்தார். தங்கபாண்டியன் மதுரை மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். இந்த கோர சம்பவத்தை அடுத்து அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்த கள்ள சாராயம் விற்ற அனைவரையும் கைது நடவடிக்கை எடுத்து உள்ளனர் . மீண்டும் இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு திண்டுக்கல் மாவட்ட கண் காணிப்பாளர் விரைந்து உள்ளார். இந்த கள்ள சாராயம் காவல் துறை உதவியுடன் நடந்து வருவதாக பாதிக்க பட்ட மக்கள் குமுறல்.

செய்தியாளர்:பகருதீன்..