சின்னமனூரில் மக்கள் வாழும் பகுதியில் டாஸ்மாக் வந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதனை குறிக்கும் வீடியோ தான் மெயின் ரோட்டில் பாராக மாறும் கடை குறித்து பல்வேறு புகார்களின் மீது DSP போடி அவர்கள் நடவடிக்கை எடுத்தும் ஆளும் அரசு செய்த சூழ்ச்சியால் அதன் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாகவே மாறுகின்றது.
இங்கு அரசு டாஸ்மாக் கடை வந்ததிலிருந்து கலவரம், தினந்தோறும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் மீண்டும் மெயின் ரோட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பது வேதனையான ஒன்று. இதன் கடைகள் கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியளித்து மாவட்ட ஆட்சியருக்கு பொய்யான தகவலையும், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, பொதுப்பணித் துறையும் கண்டும், காணா எண்ணமே உள்ளது. காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா? என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், சின்னமனூர் மது ஒழிப்பு இளைஞர் சங்கம், ஊர் கமிட்டி பொறுப்பாளர்கள், விவசாயிகள் உரிமை மீட்பு இயக்கம் ஆகியோர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
செய்தி;- பால்பாண்டி, தேனி..
You must be logged in to post a comment.