தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்த சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு…

மதுரை மாநகர் C1 திடீர்நகர் (ச&ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.K.ஜான் ரோந்து பணியில் இருந்தபோது நியூ காலேஜ் ஹவுஸ் நடைபாதையின் அருகில் நடக்க இயலாமல் தொழுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று இருந்த முதியவரை தனது சொந்த செலவில் ஆட்டோவில் ஏற்றி மதுரை மாவட்டம் யா.புதுப்படியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையர் திரு.சசிமோகன் இ.கா.ப., (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.K.ஜான் அவர்களை பாராட்டினார்கள்.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion