Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை கட்டிட விதிக்கான கருத்தை தெரிவிக்க கடைசி தேதி.20/08/2018.. தாமதம் வேண்டாம்…மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது..

கீழக்கரை கட்டிட விதிக்கான கருத்தை தெரிவிக்க கடைசி தேதி.20/08/2018.. தாமதம் வேண்டாம்…மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது..

by Mohamed

தமிழக அரசால் , தமிழ் நாடு ஒருங்கிணைந்த  வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் என்கிற வரைவு விதிகள் 2018 கடந்த மொதம் வெளியிடப்பட்டு அரசு இணைய தளங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இந்த கட்டிட விதிகளின் பிரகாரம் தான் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை கட்ட வேண்டும். அதே வேளையில் இந்த வரைவு விதிகள் சம்பந்தமாக ஏதேனும் கருத்துக்களை  பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் 20.08.2018 தேதிக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலமாக நகராட்சி  நிர்வாக இயக்குனருக்கு தெரிவிக்கலாம் என தின நாளிதழ்கள்  மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நம் கீழக்கரை நகராட்சியை     பெறுத்தமட்டில் கடந்த ஆண்டுகளில் மட்டும் கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்த 430 விண்ணப்பங்களுள் 420 மனுக்கள் முறைப்படி கட்டிடம் கட்டுவதற்கொன சட்ட விதிகளை காரணம் நிராகரிக்கப்பட்டு  உள்ளது. ஆனால் அந்த நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக மடடும் ரூ.19,95,600 ஐ பொது மக்களிடம் இருந்து வசூலித்து உள்ளனர்.

ஆகவே நம் புராதான கீழக்கரை நகரின் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் எதிற்காக சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும் உடனடியாக நகராட்சி  நிர்வாக இயக்குநரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் கருத்துக்களை தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும். ஆகவே பொது மக்கள் தங்கள் கருத்துக்களை அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல கட்டாயத்தில் உள்ளனர்.

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்

முதலில் கீழே இணைக்கப்பட்டு தகவல்களான கீழக்கரை நகராட்சியிடம் இருந்து தகவல் அறியும்  உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கட்டிட அனுமதி சம்பந்தமான தகவல் மற்றும் அரசு வெளியிட்டுள்ள நாளிதழ் அறிவிப்பின் அடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கும் மாதிரி மனுவினை [email protected] என்கிற நகராட்சி நிர்வாக  ஆணையரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான முயற்சியை கீழக்கரை மக்கள் டீம் அமைப்பு காதர் இதற்கான விபரங்களை தகவல்  அறியும் சட்டம் மூலம்  பெற்று, கீழக்கரையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கீழே உள்ள மாதிரியில் ஈமெயில் மற்றும் தபால் மூலம் கருத்துக்களை அனுப்ப கோரிக்கை வைத்திருந்தார்.  இதற்கான விண்ணப்பத்தின் மாதிரி படிவம் கீழே word formatல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில். உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி மேலே உள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பவும். மாதிரி படிவம் உங்கள் பார்வைக்கு கீழே  இணைக்கப்பட்டுள்ளது. கீழே  உள்ள லிங்கை கிளிக் செய்யவும் ..

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள்

கீழக்கரை நகராட்சியிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கட்டிட அனுமதி சம்பந்தமான தகவல்.

அரசு வெளியிட்டுள்ள நாளிதழ் அறிவிப்பு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!