கீழக்கரையில் மழையினால் இடிந்த வீடு.. களத்தில் SDPI கட்சியினர்..

கீழக்கரை புதுத்தெருவில் வசிக்கும் அமீர் அலி என்பவரின் வீடு இன்று (27/10/2017) பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கருவேல மரம் அகற்றுவதற்காக மண்ணை வீட்டின் அடித்தளத்திலும் தோண்டியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இடிந்த வீடு ஓட்டு வீடாக இருந்தாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் வீட்டில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு கீழக்கரை நகர் SDPI. கட்சியின் நிர்வாகிக்கள் மற்றும் பலர் இடிபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவை யான உதவிகளை செய்தனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளை நீக்கி வீட்டின் இடிபாடுகளில் கிடந்த நகை மற்றும் பொருட்களை SDPI கட்சியை சார்ந்த சித்திக் பாதிக்கப்பட்ட அமீர் அலி வசம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இடி பட்ட இடத்திற்கு காவல்துறை துணை சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் கீழக்கரை கிராம அலுவல் அதிகாரி கருப்பையா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..