இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவுப்படி, ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும்15.02.2019 தேதி முதல் 21.02. 2019 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.
23. 02. 2019, 24 .02 .2019 தேதிகளில் காலை 09:00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது . இதில் கலந்து கொள்பவர்கள் நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும். பொது சேவையில் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்) மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடற் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21.02.2019 தேதி மாலை 05:00 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்) , மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுபடுவோருக்கு காவல் துை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்து நாளுக்கு ரூ.560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.
You must be logged in to post a comment.