
கீழக்கரையில் இன்று (27/10/2020) நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளே கண்டித்து கீழக்கரை கீழக்நாகர தமிழர் கட்சி மற்றும் ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் இளங்கோவன் தலைமையில் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ராஜ், கீழக்கரை நாம் தமிழர் கட்சி செயலாளர் வாசிம் அக்ரம், நகர் தலைவர் மன்சூர் தீன், ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் செயலாளர் பயாஸ் அலி ,மற்றும் துணை செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் முன்னிலையிலும் முற்றுகை போராட்டம் நடை பெற்றது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் நகர் இணை செயலாளர் ஹாதில், நகர் இளைஞர் பாசறை செயலாளர் ஆரிப், பொருளாளர் சாஹுல் மற்றும் மாணவர் பாசறை செயலாளர் உமர் மற்றும் நகர் நிர்வாகிகள் மற்றும் கஸ்டமன்ஸ் சாலை பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஒரு மாத காலத்துக்குள் சரி செய்து தருமாறு வாக்குறுதி அளித்துள்ளனர்.
You must be logged in to post a comment.