விபத்தில் சிக்கிய தம்பதி சிகிச்சைக்கு உதவி தி.மு.க., மா.செ…

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் – பரமக்குடி சாலையில் உடைகுளம் பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் , மனைவி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாகச் சென்ற இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவசர சிகிச்சை பிரிவு 108 க்கு தகவல் கொடுத்தார். இதன்படி ஆம்புலன்ஸ் சம்பவ இடம் வந்தது. காயமடைந்த தம்பதிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவனை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக மருத்துவருக்கும் மொபைல் போன் வாயிலாக தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். முத்துராமலிங்கத்தின் மனிதநேய உதவியை அப்பகுதியினர் பாராட்டினர்.