Home செய்திகள் தரங்கம்பாடி தாலுக்காவில் சுகாதார பணிகள், நிவாரணப் பணிகள் தீவிரம்

தரங்கம்பாடி தாலுக்காவில் சுகாதார பணிகள், நிவாரணப் பணிகள் தீவிரம்

by mohan

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முழுவதிலும் தீவிரமாக சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்களாச்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரானா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டநிலையில் அந்த பகுதிகளில் வெளி நபர்கள் நடமாட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் உத்தரவின்பேரில் ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களுக்கு வாகனம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருக்களாச்சேரி எடுத்துக்கட்டி, பாலூர், ஆயப்பாடி ஆகிய கிராமங்களில் வாழும் 100 குடும்பங்களுக்கு நாள்தோறும் , தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை செம்பனார்கோவில் கலைமகள் கல்விக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் குடியரசு வழங்கி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருக்களாச்சேரியில் 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது, அப்போது சமூக ஆர்வலர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் உடன் இருந்தார். இதுபோன்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் டி.மணல்மேடு பகுதியில் வசிக்கும் நரிகுறவர் இன 15 குடும்பங்களுக்கு செம்பனார்கோவில் கலைமகள் கல்விக் குழுமத்தின் சார்பில் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.அப்போது காழியப்பநல்லூர் சமூக ஆர்வலர் மகாகிருஸ்ணன் உடன் இருந்தார்.

இரா. யோகுதாஸ்,

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!