Home செய்திகள் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் சுகாதார பணியாளர்களை பாராட்டி தனது சொந்த செலவில் உணவுப்பொருட்கள் , காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் சுகாதார பணியாளர்களை பாராட்டி தனது சொந்த செலவில் உணவுப்பொருட்கள் , காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு அமலில் உள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் உக்கிரபாண்டி (48). அதே கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் அவரது மனைவி பாண்டியம்மாள் (அதிமுக)(40). இந்நிலையில் தங்களது ஊராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டி சிறப்பாக பணிபுரிந்து வருவதற்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கிளார்.

சுகாதார பணியாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவராக பொருட்களை வாங்கி சென்றனர். இதில் போத்தம்பட்டி ஊராட்சி மன்றதலைவர் உக்கிரபாண்டி, போத்தம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள், வடுகப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வதனா தனிக்கொடி, ஊராட்சி செயலாளர்கள் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனா்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!