இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பாக சுகாதாரத்தி ருவிழா-சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு விழிப்புணர்வு அரங்குகளை பார்வையிட்டார்.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: தமிழக அரசு பொதுமக்கள் அனைவரும் கட்டணமின்றி தரமான மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைய வேண்டுமென்ற நோக்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார திருவிழா-சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் பொது மருத்துவம், தாய்ää சேய் நலம், குடும்பநல ஆலோசனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, இருதய சிகிச்சை, தொழுநோய் கண்டறிதல், காசநோய் கண்டறிதல், கண் பார்வை பரிசோதனை,சர்க்கரை, ரத்த அழுத்தம் கண்டறிதல் உள்ளிட்;ட பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்கேன்,இசிஜி போன்ற நவீன மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்கும் நோய்களை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை வழங்குவது எவ்வளவு முக்கியமோ, நோய்கள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அதே அளவு அவசியமாகும். தமிழக முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,01,208 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
பரமக்குடி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நடமாடும் மருத்துவ குழு வீதம் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு 2018-19ம் ஆண்டில் இதுவரை 196 மருத்துவ முகாம்களில் 1,54, 155 பேர் பயனடைந்துள்ளனர்.வளமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், சீரான உடற்பயிற்சிஅவசியமாகும். இம்முகாமில் இயற்கை உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்ப நலம், வைரஸ் காய்ச்சல் தடுப்பு, எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள்,அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்சார்பாக மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அன்வர் ராஜாமுன்னிலையில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் எஸ்.மீனாட்சி, பரமக்குடி நகராட்சி முன்னாள் உறுப்பினர் திரு.எம்.ஏ.முனியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.