நெல்லையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 06.03.19 அன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக கைவினைப் பொருட்களின் கண் காட்சியும் விற்பனையும் கோலாகலமாக தொடங்கியது. சமூக மேம்பாட்டுக்காக சிறப்பாக சேவையாற்றும் பெண்களும், பெண்களின் வெற்றிக்காக பின்புலமாக சேவைகள் புரிந்துவரும் ஆளுமைமிகு ஆண்களும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

06.03.19 துவங்கி 08.03.19 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. சிறந்த கைவினைப் பொருட்கள் குறிப்பாக பெண்களுக்கான பொருட்கள் நிறைந்த ஸ்டால்கள் இடம் இங்கு இடம் பெற்றுள்ளன.

இங்குள்ள பொருட்களை வாங்கிப் பயனடையவும் கைவினைக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் செய்யலாம். இந்த கண்காட்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி சிறப்பாக செய்திருந்தார்.

இந்த கண்காட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்த அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி அவர்களுக்கும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

#Paid Promotion