தந்தையால் களவாடப்பட்ட இரு சக்கர வாகனம்.. மகளிடமிருந்து மீட்பு..

சென்னை மணலி பகுதியில் தந்தையால் திருடப்பட்ட இருசக்கர வாகனம் எனத் தெரியாமல் அதனை ஓட்டிவந்த மகளிடம் இருந்து வாகனத்தை மீட்ட போலீசார், தந்தையை கைது செய்தனர்.

மணலி பாரதி நகரைச் சேர்ந்த கார்த்திக், தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என புகாரளிக்க காவல்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை சிறுமி ஒருவர் ஓட்டிவருவதைப் பார்த்து அவரை மடக்கி விசாரித்தார். அந்த வாகனத்தை தனது தந்தை எடுத்து வந்து வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்ததாக சிறுமி கூறவே, போலீசாருடன் கார்த்திக் அவரது வீட்டுக்குச் சென்றார்.

அங்கு சிறுமியின் தந்தை சரவணன், மேலும் மூன்று வாகனங்களைத் திருடி வந்து மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவனை கைது செய்து வாகனங்களை போலீசார் மீட்டனர்.