Home செய்திகள் குறை தீர் நாளில் கோரிக்கை மனுக்கள் துரித நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு..

குறை தீர் நாளில் கோரிக்கை மனுக்கள் துரித நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.21- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. 

கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவியர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 256 மனுக்களை பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

மண்டபம் ஒன்றியம்  அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்த சித்ராதேவி இயற்கை மரணம் அடைந்தார். இதையொட்டி ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் சித்ரா தேவி வாரிசுதாரர் காளிமுத்துவிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்ரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com