உசிலம்பட்டி அருகே பொருப்புமேட்டுப்பட்டியில் மக்கள் நல திட்டம் ..

உசிலம்பட்டி அருகே பொருப்புமேட்டுப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் 421 பயனாளிகளுக்கு ரூ89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொருப்புமேட்டுப்பட்டியில் அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதனை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பல்வேறு வளர்ச்சி பணிகள், மற்றும் பயனாளிகள் என மொத்தம் 421 பேர்களுக்கு ரூ 89 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

#Paid Promotion