தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் 72 வது நினைவு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் 72வது நினைவு தினம் இன்று (30.01.219) அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் .மு.வீரப்பன் தலைமையில் அரசு அலுவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்

அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்கள் தியாகராஜன் (பொது), திருமதி சிந்து (நிலம்) உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தித் துறை) சையத் முஹம்மத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.