கண்டெடுத்த பணத்தை நல்லுள்ளத்துடன் திருப்பியளித்த அன்புள்ளம்..

கடந்த இரு நாட்களுக்கு முன் கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ₹50564/ பணத்தை செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சம்பந்தப்பட்ட நபர் அத்தொகையை தொலைத்து விட்டார். இந்நிலையில் அய்யூப் கனி என்பவர் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் பணத்தின் உரிமையாளரை கண்டறிந்ததில் அப்பணம் யூசூப் சுலைஹா மருத்துவமனைக்கு சொந்தமான பணம் என்பது உறுதியானது. உடன் அய்யூப் கனி அவர்களுக்கு தகவல் தந்ததின் பேரில் பணம் எவ்வளவு, என்னென்ன ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து பணம் ₹54,564/த்தை யூசுப் சுலைஹா மருத்துவமனை A.O. சிராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார். இது சம்பந்தமாக கீழக்கரை மக்கள் டீம், சன்ரைஸ் மீடியா மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது குறிப்பிடதக்கது. நீங்களும் பாராட்ட அழைக்கவும். +91 96291 81052.

உதவிக்கரம் நீட்டுங்கள்..