கீழக்கரை அருகே ஏர்வாடி மற்றும் மேலகிடாரத்தில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலின் படி விற்பனை துவக்கம்

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் ஷாப் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் மக்கள் மருந்தகம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் துவங்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிக்கல் அருகே மேலகிடாரம் ஊராட்சியில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று 09.04.17 மாலை 5 மணியளவில் ஏர்வாடியில் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேலக்கிடாரத்தில் 6:30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதை இயக்கத்தின் மாநில கள பணி ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக ஏர்வாடி மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் டாக்டர். அகமது யாசீன் வரவேற்புரை பேசினார். மக்கள் மருந்தகத்தின் மாநில ஆலோசகர் கண்ணன், IMS கல்லூரி பேராசிரியர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் பாதை இயக்கத்தின் இராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலகிடாரம் மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜா நன்றியுரை வழங்கினார்.

இறைவன் நாடினால் மிக விரைவில் கீழக்கரை நகரிலும் சகாயம் IAS வழிகாட்டுதல் படி, மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு மக்கள் மருந்தகம் திறக்கப்பட இருக்கிறது. மக்கள் மருந்தகம் வெற்றி பெற கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..