Home செய்திகள் அன்பை வளர்ப்போம், வன்முறை ஒழிப்போம், ஒற்றுமை வளர்ப்போம், மாபெரும் சமூக நல்லிணக்க பேரணி.!

அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு மக்கள் சந்திப்பு யாத்திரை சென்னையில் அக்டோபர் 2 துவங்கி,23 மாவட்டங்கள்,150 கிராமங்கள், 150 கல்லூரிகள், 150 பள்ளிகளில் அன்பை வளர்ப்போம்!,வன்முறை ஒழிப்போம்!, ஒற்றுமை வளர்ப்போம்!என்ற சமூக நல்லிணக்க பரப்புரை-பிரச்சாரத்தை மேற்கொண்டு கன்னியாகுமரியில் அக்டோபர் 22 நிறைவடையும்.

இந்த யாத்திரையை, சமூக நல்லிணக்க முன்னணி, எக்தா பரிஷத், எல்லை காந்தி- அப்துல் கப்பார் கான் ஆரம்பித்த குதாயி கித்மத் கார், உள்ளிட்ட பொது நல அமைப்புகள் சேர்ந்து மேற்கொள்கின்றன.அதன் ஒரு பகுதியாக, புதுவை, மர்க்கஜ் அல் இஸ்லாஹ், கல்வி மற்றும் சேவைக்கான அறக்கட்டளைக்கு வருகை தந்தனர்.

தஞ்சை விசிறி சுவாமிகள், குஜராத் மாநில காந்தியவாதி- சுரேஷ் பாய் சர்வோதை, குதாயி கித்மத் கார்- பொதுச் செயலாளர்- இனாமுல் ஹஸன், சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர்- சிவக்குமார், ஏக்தா பரிஷத்- ரமேஷ், சர்வமத பிரார்த்தனை மையம்- செல்லதுரை உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் வந்திருந்தனர்.

அவர்களுக்கு மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் சார்பாக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, அதில் இந்த காந்தி யாத்திரை செல்லுகின்ற அனைவரையும் கவுரவிக்கும் வகையில், காந்திக்கு மெளலானா முகம்மது அலியின் தாயார் பீபி அம்மா அவர்கள் கதர்-கண்ணியம் என்று பெயர் வைத்து கொடுத்த கதர் ஆடையின் நினைவாக அனைவருக்கும் கதர் துண்டு போர்த்தப்பட்டது.

நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொன்னதை போன்று- வெறுப்பு உணர்வை தவிர்த்து, அன்பை, அமைதியை பரப்புவோம் என்று உறுதிமொழியுடன், யாத்திரை மேற்கொள்ளவோர் கண்ணியமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!