Home செய்திகள் இராமநாதபுரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி…

இராமநாதபுரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி…

by ஆசிரியர்

தமிழகத்தில் 1993 இல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை ராமநாதபுரத்தில் அன்றைய காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஏ. பிலிப்  தொடங்கி வைத்தார். இன்று வரை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் 62 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா துவக்கி வைத்தர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் நடராஜன், ரவீந்திரபிரகாஷ் (குற்றப்பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

2019 ஆம் ஆண்டில் வருடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாற்றுவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த சம்பந்தப்பட்ட உட்கோட்ட அதிகாரிகள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். ஓய்வு இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, ஓய்வு சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஓய்வு ஆசிரியர் துரைப்பாண்டியன்ஆகியோர்  பயிற்சி அளித்தனர். சிறப்பாக பணிபுரிந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 10 பேருக்கு பண வெகுமதி வழங்கப்பட்டது.  பயிற்சில் கலந்து கொண்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியாளர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com