திமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: அனிதா. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

தூத்துக்குடியில் திமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, முகாமை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா R. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள RC நடுநிலைப் பள்ளியில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்து முகாமை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா R. ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் சரவணக்குமார் ,முகாமுக்கு முன்னிலை வகித்தனர்.

முகாமில் S.R.S உமரி சங்கர் மாநில மாணவரணி துணை செயலாளர் , குமாரி விஜயகுமார் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் , A.K. பூபதி தலைமை செயற்குழு உறுப்பினர் , S. கருணாகரன் தலைமை செயற்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.