இராமநாதபுரத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா..

இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.04.2018) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுடப்வியல் துறை அமைச்சர் மணிகண்டன் தொடுவானம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியாக்ளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் விழாவிற்கு தலைமை வகித்தார்.

மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தகவல் தொழில்நுடப் வியல் துறை அமைச்சர் மாணவ, மாணவியர்கள் மத்தியில் சிறப்புடையாற்றினார். மேலும் இத்திட்டத்தின் கீழ் 2017-2018 கல்வியாண்டில் 10,241 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது என்ற விபரத்தை தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு செய்து வரும் பல்வேறு பணிகளை மக்கள் மத்தியில் விரிவாக விளக்கி கூறினார்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், செய்திமகக்ள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.விசுவாசம் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.