சித்திரை வெயில் தொடங்கும் முன்பே தொடங்கியது தண்ணீர் பந்தல் சீசன் – SDPI கட்சி சார்பில் தண்ணீர் பந்தல்..

கோடை காலம் தொடங்கியவுடன் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் அனைத்து சமுதாய அமைப்புகளிலும் பந்தல்கள் அமைத்து நீர் மற்றும் மோர் ஆகாரங்கள் வழங்குவர்.

இன்று (08-05-2018) கீழக்கரையில் ஃபாலிஹ் மெடிக்கல் SDPI- கட்சி சார்பாக மோர் மற்றும் தண்ணீர் பந்தலை ஒருங்கிணைப்பு குழு நகர் தலைவர் கீழை அஸ்ரப் மற்றும் நகர் செயலாளர்.காதர் முன்னிலையில் SDPI கட்சியின் மாநில பொது செயலாளர். பி. அப்துல் ஹமீது திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நகர் துணை தலைவர்கள் நூருல் ஜமான், ஹமீது பைசல், நகர் இணை செயலாளர்கள் வருசை இப்ராஹிம் மற்றும் பொருளாளர் சகுபர் சாதிக் மற்றும் கிழக்கு கிளை நிர்வாகிகள் துணை தலைவர் பக்ருதீன் மற்றும் மேற்கு கிளை நிர்வாகிகள் தலைவர் சுல்தான் இணை செயள்ளார் ஷஹீத் ஹசன் மற்றும் காஞ்சிரங்குடி கிளை தலைவர் சின்ன தம்பி மற்றும் நிர்வாகிகள், பாப்புலர் ஃபிராண்ட் உறுப்பினர்கள் ராசிக், நபீல், ஜமீன் ,கேம்பஸ் பிராண்ட் மாவட்ட பொருளாளர் சுஹைல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தோழமை கட்சிகள் விசிகட்சியின் நகர் செயலாளர்.ஹமீது யூசுப் மற்றும் நைனா, ஹிதாயாத் துல்லா, தமுமுக நகர் தலைவர் பாதுஷா மற்றும் நாம் தமிழர் கட்சி நகர் செயலாளர் கீழை பிரபாகரன் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நகர் செயலாளர் ஹாஜா முஹைதீன் மற்றும் மக்கள் நல பாது காப்பு கழகம் நகர் செயலாளர் முஹைதீன் இப்ராஹிம், பொருளாளர் சாலிஹ் ஹுசைன், 18.வாலிபர் டிரஸ்ட், சாலை வெல்பர் துணை செயாளர் சுபைர் மற்றும் காங்கிரஸ் கட்சி ஹமீது காண் மற்றும் ஏராளமான பெண்களும் ஆண்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.