Home செய்திகள் வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம்..

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம்..

by ஆசிரியர்

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியாக கோயில்வாடி கடற்கரையில் தங்கச்சிமடம் , பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்கு தளம் அமைத்து வாரம் 3 முறை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை வலை மீன்பிடியை முற்றிலும் தடுக்க வேண்டும் என மண்டபம் மீனவர் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீன்வளத் துறை அதிகாரிகள் உடந்தையால் இரட்டை வலை மீன்பிடி மண்டபம் கடல் பகுதிகளில் தொடர்கிறது . இந்நிலையில் ஜன., 24 ஆம் தேதி இரட்டை வலை மீன்பிடி விவகாரம் தொடர்பாக மீன் வளத்துறை அதிகாரிகளில் ரோந்து செல்ல கோயில்வாடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் படகு கொடுத்து உதவினார். இதனால் இரட்டை வலை விசைப்படகு உரிமையாளர்களுக்கும், (வெளியூர்காரர்கள்) கோயில்வாடி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இது தொடர்பாக மண்டபம் பகுதி மீனவர்கள் , தங்களை தொழில் செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்வதால் மீன் பிடியை தொடர பாதுகாப்பு கோரி ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் வெளியூர் (பாம்பன், தங்கச்சிமடம்) விசைப்படகு உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சமரச பேச்சு வார்த்தை நடத்த மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம் அழைக்கப்பட்டனர். அங்கு குறைந்த எண்ணிக்கையில் சென்ற மண்டபம் மீனவர்களை , பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் தாக்க முயன்றனர். இதனால் சமரச கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பாக மண்டபம் அனைத்து மீனவர் நலச்சங்கங்கள், வர்த்தக சங்கம், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மண்டபம் வட கடற்கரையில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டபம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.கே.கே.தங்க மரைக்காயர் தலைமை வகித்தார். விசைப்படகு உரிமையாளர் இக்பால் மரைக்காயர், மத்திய சங்கத் தலைவர் சிகேஎம்சி கணபதி, முன்னாள் கவுன்சிலர் மா.மைதீன், திமுக நகர் செயலாளர் டி.ராஜா முன்னிலை வகித்தனர். இரட்டை வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மண்டபத்தில் தங்கு தளம் அமைத்து மீன்பிடியில் ஈடுபடும் மண்டபம் முகவரியில்லா விசைப்படகுகள் தங்கள் சொந்த ஊர் கொண்டு செல்ல வேண்டும், விசைப்படகு உரிமையாளர்கள் முத்துகுமார், கே.முருகேசன், குமார், மாரிமுத்து, நம்புராணி, செல்வராணி, கருப்பசாமி, முருகேசன் உள்பட 10 பேர் மீதான பொய் வழக்கை மீன்வளத் துறை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும், மண்டபம் மீனவர்கள், படகு உரிமையாளர்களை தாக்க முயன்ற வெளியூர் ( பாம்பன், தங்கச்சிமடம் )விசைப்படகு உரிமைகள், மீனவர்களின் விரோத போக்கை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதெவைும், பிப்ரவரி 5 ஆம் தேதி கடை அடைப்பு, உண்ணாவிரதம் இருப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மனும், மண்டபம் ஒன்றிய திமுக மீனவரணி துணை அமைப்பாளருமான எம்.நம்பு ராஜன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளருமான ஐ.என். பூவேந்திரன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் எஸ்.நாகராஐன், மீனவர் சங்க பிரதிநிதிகள் முன்னாள் கவுன்சிலர் பெரி.பாலசுப்ரமணியன், எம்.ஜி.விஜய ரூபன், எம்.ஜாகீர் உசேன், சுல்தான் (என்எஸ்) நைஸ் கிங் எஸ்.நாகராஜன், இந்திய கம்யூ., பிரமுகர் எஸ்.கருப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் இ.முபாரக், சி.செல்வராஜ், முனியசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் சி. செல்வகுமார், காதர்முகைதீன், செந்தில், அதிமுக., நகர் தலைவர் எம்.சுப்ரமணியன், காங்., நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், பி.பார்த்திபன், பாஜ., நிர்வாகி எம்.கண்ணன், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.ராஜூ, திமுக., பிரதிநிதிகள் ஒசீது, சாதிக், தண்டல் முருகானந்தம், செந்திவேல்,  அமமுக., நகர் செயலாளர் எம்.களஞ்சிய ராஜா, இந்து முன்னணி நகர் செயலர் வி.முத்துராஜ், பாரம்பரிய மீனவர் தொழிலாளர் அணி நிர்வாகி அப்துல் காதர், பாரம்பரிய மீனவர் சங்கம், மண்டபம் மீனவர் சங்கம், தேசிய மீனவர் சங்கம், விசைப்படகு மீனவர் நலச்சங்கம், விசைப்படகு மீனவர் முன்னேற்றச் சங்கம், கடல் தாய் மீனவர் சங்கம், செம்மீன் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!