கச்சத்தீவு அருகே மிதவையுடன் தத்தளித்த 2 மீனவர் பத்திரமாக மீட்பு ..

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர் 2 பேரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். 

ராமேஸ்வரம் தெற்கு கரையூரைச் சேர்ந்த ஆண்டி மகன் வினோத் 18, காளிமுத்து மகன் மகாராஜன் 26 ஆகியோர் மிதவை மூலம் நடுக்கடலில் கணவாய் மீன்பிடிக்கச் சென்றனர். காற்றின் வேகம், கடல் நீரோத்தால் கச்சத்தீவு அருகே மிதவை சென்றது. ஆழமான கடல் பகுதியில் ஆபத்தானநிலையில் தத்தளித்து கொண்ருடிந்தவர்களை கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். கரை சேர்ந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 12 மணி நேர விசாரணைக்கு பிறகு காங்கேசன் கடற்படை முகாம் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு நெடுந்தீவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.  

#Paid Promotion