இராமநாதபுர மாவட்டத்தில் மீனவர்கள் நடைபயணம் மற்றும் காத்திருப்பு போராட்டம் .. வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் சமுதாயத்தின் பல் வேறு சங்கங்கள் காத்திருப்பு மற்றும் நடைபயணம் போராட்டத்தை பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17/12/2018) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் விசைப்படகுகளின் கரையோர மீன்பிடியை முற்றிலும் தடுக்க வேண்டும், கரையோர மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகளின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்,  சட்டவிரோத இரட்டை மடி, சுருக்கு மடி மீன்பிடி தொடர்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அதே போல் மண்டபம் ஒன்றியம் வேதாளை , சீனியப்பா தர்ஹா, திருவாடானை ஒன்றியம் முள்ளிமுனை, காரங்காடு, மோர் பண்ணை, திருப்பாலைக்குடி கடலோர கிராமங்களில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றாங்கரை முகத்துவாரம் மணலால் மூடப்பட்டதை அகற்றி படகுகள் கடலுக்குச் செல்லும் வகையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..