ஆம்பூர் அருகே அடுத்தடுத்து இரு வேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் கார்த்திகேயன் என்ற டிராக்டர் டிரைவர் உயிரிழந்தார்.

மேலும் ஆம்பூரை அடுத்த வெங்கிலி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ் சுரேஷ் என்பவர் மீது கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

செய்தியாளர்:- கே.எம்.வாரியார்