உச்சிப்புளியில் தீ விபத்து கடைகள் எரிந்து சாம்பல்..வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை ஓரம் தென்னை கீற்று கொட்டகைகளால் பழம், காய்கறி, தையல், கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இதில் அரை மணி நேரத்திற்கு முன் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு துறையினர் விரைந்து வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உச்சிப்புளி நகர் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. 35 நிமிடங்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலு, கணேசன், செல்வம் ஆகியோரது ஓட்டல், முனியாண்டி, ராஜகோபால், நாகராஜன் ஆகியோரது பழக்கடை, கஜேந்திரன், பெரியகருப்பன் ஆகியோரின் காய்கறி கடை, ராமமூர்த்தி என்பவரது கோழி இறைச்சி கடை, முருகன் தையல் கடை உள்பட 15 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.