Home செய்திகள் நெல்லையில் தமிழ் இலக்கிய கூட்டமைப்புகள் சார்பில் உலக தாய்மொழி தினவிழா கவியரங்கம் …

நெல்லையில் தமிழ் இலக்கிய கூட்டமைப்புகள் சார்பில் உலக தாய்மொழி தினவிழா கவியரங்கம் …

by ஆசிரியர்

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் தமிழ் இலக்கிய கூட்டமைப்புகள் சார்பில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக தாய்மொழி தின விழா 03.03.19 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தாய்மொழி தின விழாவில் கவியரங்கமும், தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ராஜேந்திரனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் வேலம்மாள் முத்தையா தலைமை தாங்கினார். நெல்லை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கவியரங்கில் கவிஞர் பாப்பாக்குடி, அ.முருகன், கோதைமாறன், கவிஞர் சுப்பையா , கவிஞர் பார்த்திபன் லியோனா செல்வாரா , பாப்பாக்குடி இரா .செல்வமணி, முத்து வேலன், கி.சந்திர பாபு ஆகியோர் கவிதை பாடினார்கள். தொடர்ந்து தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் பே. ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சத்தியமூர்த்தி, தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பாளர் தேசிய நல்லாசிரியர். சு.செல்லப்பா, மேலும் இலக்கிய அமைப்பின் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் , திருக்குறள் பேரவை செயலர் திருக்குறள் . அ.முருகன் ,பொருநை இலக்கிய வட்டத்தின் புரவலர் திருமலையப்பன் என்ற தளவாய் நாதன் , பொதிகை கவிஞர் மன்ற செயலாளர் சிவசங்கரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நூலகர் முனைவர் பி பாலசுப்பிரமணியம் திருவள்ளுவர் கல்லூரியின் நூலகர் முனைவர் பாலச்சந்திரன், கதிர் டிவி இயக்குனர் முத்தமிழ், தமிழ்செல்வன் பாலசரஸ்வதி ,உட்பட பல்வேறு இலக்கிய அமைப்பினர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பல்வேறு அமைப்பின் சார்பில் விருது பெற்ற கவிஞர் ராஜேந்திரனுக்கு பொன்னாடையும், பரிசுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் பே. ராஜேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். பாப்பாக்குடி. இரா. செல்வமணி நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் அகில இந்திய வானொலியின் முன்னாள் உதவி நிலையை இயக்குனர் குக.நமச்சிவாயம் பிரிட்டோ , தமிழ் முழக்க கழக செயலாளர் ராமர், ராஜேஸ்வரி, ரேகா ஜியா, பாலகிருஷ்ணன் , ஆடிட்டர் நயினார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!