Home செய்திகள் திருப்புல்லாணி அரசு பள்ளியில் உலக மரபு புகைப்படக் கண்காட்சி..

திருப்புல்லாணி அரசு பள்ளியில் உலக மரபு புகைப்படக் கண்காட்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வாரவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடங்கள் புகைப்படக் கண்காட்சி நடந்தது. முதுகலை ஆசிரியர் முகேந்திரன் தலைமை வகித்தார். மன்றச் செயலர் ராஜகுரு முன்னிலை வகித்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் முஹமது சகாப்தீன் வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியை தலைமை ஆசிரியை புரூணா ரெத்னகுமாரி துவங்கி வைத்தார். இக்கண்காட்சியல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய, நுண், புதிய கற்கால கருவிகள், பெருங்கற்காலத் தடங்கள், பழமையான கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், புத்தர், தீர்த்தங்கரர் சிற்பங்கள், கோட்டைகள், ஓவியங்கள், பாரம்பரிய மரங்கள் போன்றவற்றின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து மாணவ மாணவிகள் ஜனனிஸ்ரீ, பூமிகா, பர்வின், தர்ஷினி, நஜிம் ஷெரிப், காமேஸ்வரன், ஸ்ரீதன்வி ஆகியோர் விளக்கமளித்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஶ்ரீவிபின் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com