கீழக்கரை இஸ்லாமியக் கல்வி சங்கம் (AIE) தேர்வு முடிவுகள் வெளியீடு – மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி 

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா ஆகிய மத்ரஸா மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அரையாண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த அட்டவணை மத்ரஸா அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனை மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 17/02/208 முதல் 28/02/2018 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, பிரார்த்தனை, வரலாறு சூரா மனனம், நபிமொழிகள், குர்ஆன் ஓதும் முறை, நபிகளாரின் வாழ்க்கை முறை உள்ளிட்ட பாடத்திட்டங்களின் கீழ் தேர்வுகள் நடத்தப்பட்டது அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை இஸ்லாமிய கல்வி சங்கம். (AIE) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சட்டப் போராளி சல்மான் கான் வெளியிட்டார்.