கட்டுரை போட்டியில் வென்ற முஹைதீனியா பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டு

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 20.02.17 அன்று தாஸீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”THE SINGLE PAGE WILL CHANGE” என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக் குழு பொருளாளர் சேகு பஷீர் அஹமது, பள்ளியின் முதல்வர் NM சேகு சஹபான் பாதுஷா ஆகியோர் மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவப்படுத்தினர். வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தாளாளர் மௌலா முகைதீன், உப தலைவர் MMS முகைதீன் இபுறாகீம், செயலாளர் ராசிக்தீன், உறுப்பினர் ரபீக் சாதிக் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.