Home செய்திகள் தூத்துக்குடியில் “சுரபி அறக்கட்டளையின்” சார்பாக மத நல்லிணக்க சிறப்பு சமத்துவ பொங்கல் விழா.!

தூத்துக்குடியில் “சுரபி அறக்கட்டளையின்” சார்பாக மத நல்லிணக்க சிறப்பு சமத்துவ பொங்கல் விழா.!

by Askar

தூத்துக்குடியில் “சுரபி அறக்கட்டளையின்” சார்பாக மத நல்லிணக்க சிறப்பு சமத்துவ பொங்கல் விழா.!

சாதி, மத, இன, மொழி எனும் பிரிவினை என்பது நம்மிடம் இல்லை. குழந்தைகளும் பொதுமக்களும் ஒன்றுகூடி உறுதி எடுத்துக் கொண்ட நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.

ஜாதி, மத, இன ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மும்மதத்தினரும் ஒன்று கூடி பொங்கலிட்ட, சிறப்பு சமத்துவ பொங்கல் விழா நேற்று 2/2/2020 ஞாயிறன்று மிகவும் விமரிசையாக நடந்தது. விழாவில்

திருமதி. ஜெரினா பப்பி Asst. Director MSME – DI – தூத்துக்குடி.

மறைதிரு. செல்வ ஜார்ஜ் அவர்கள், பங்குத்தந்தை , புனித அந்தோணியார் ஆலயம், தாளாளர், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, M. சவேரியார்புரம்,

திரு. M. அப்துல் நிஸ்தார் அவர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர் (Rtd), பழையகாயல்.

திரு. தாணுமலைபெருமாள் அவர்கள், பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா, ஆதிபராசக்தி நகர்.

திரு. முத்துராமன் ஐயர் அவர்கள், பிள்ளையார் கோயில் , ஆதிபராசக்தி நகர்.

திரு. BLOOD. ஜெயபால், சமூக செயற்பாட்டாளர் தூத்துக்குடி.

திருமதி. ஹேமா முரளிதரன் (செந்தாமரைக்கொடி) நிர்வாக அறங்காவலர் சுரபி அறக்கட்டளை. குழந்தைகள் அனைவரும், பெற்றோரும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சாதி, மத, இன, மொழி எனும் பிரிவினை என்பது நம்மிடம் இல்லை என சபதம் செய்து விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய எழுத்தாளரும் கவிஞருமான செந்தாமரைக்கொடி அவர்கள் பேசும் போது நல்ல கருத்துகளை குழந்தை மனது தான் எளிதாக உள்வாங்கி வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும். ஐந்தில் ஏற்காகதை ஐம்பதில் புகுத்தமுடியாது. பல மத மொழி இன வேறுபாடுகள் கொண்ட நம் இந்தியத் திருநாட்டில்.. அடுத்தவருக்கு இன்னல் செய்யாது அவரவர் அவரவரின் வழியில் நடந்தாலே போதுமானது. நெல் விளையும் போது, இந்து மதத்தவர் வீட்டு பொங்கலிலுக்காகவோ, முஸ்லிம் வீட்டு பிரியாணிக்காகவோ என்று நினைத்து வளர்வதில்லை. சூரியன் வெளிச்சம் தருவதிலோ, காற்று வீசுவதிலோ பாரபட்சம் பார்ப்பதில்லை. அவரவருக்கு பிடித்த கருத்தில் சுதந்திரமாக கடைபிடித்தலும், அடுத்தவர் உணர்வினை மதித்து நடத்தலுமே மனிதம். அதில் நிலைத்திருத்தலே உண்மையான சமத்துவம் , என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, சுரபி அறக்கட்டளையின் அறிவகம் இலவச கல்வி உதவி மைய குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற்றன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!