தூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..

எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணியை தூத்துக்குடி  S.P முரளி ரம்பா துவக்கி வைத்தார்எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் முத்து நகர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய சைக்கிள் பேரணியை எஸ்.பி.முரளிரம்பா மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன டிவிஷனல் மேனேஜர் சிவகுமார் ஆகியோர் இனைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

பேரணி தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகில் உள்ள எம்ஜிஆர் பூங்காவிலிருந்து முத்து நகர் கடற்கரை வரை நடத்தப்பட்டது. சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று (20/01/2019) காலை காலை 7 மணிக்கு தொடங்கிவைத்தார்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புனர்வை ஏற்படுத்தினர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி