தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தைப்பூசம் திருவிழாவானது நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம், சாயல்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். தைப்பூசதிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற புன்னியஸ்தலங்களுக்கு நடந்துச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது
இது குறித்து தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக அதன் மாநில பொருளாளார் M.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களுக்கு நடந்துச் செல்லும் பக்தர்களுக்கு என்று நடைமேடை அமைக்க வேண்டும் என பொது மக்களால் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது,
கிழக்கு கடற்கரை சாலையான கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பாதாசாரிகளாக புண்ணிய தலங்களுக்கு நடந்துச் செல்கிறார்கள் அதிலும் குறிப்பாக பக்தர்கள் ஆண்டுத்தோறும் திருச்செந்தூர் வேளாங்கன்னி மற்றும் ராமேஸ்வரம் போன்ற பகுதியில் லட்சகணக்கான பக்தர்கள் நடந்துசெல்கிறார்கள்
பாதசாரி பக்தர்களுக்காக நடை பாதை அமைக்காத காரணத்தால் சாலையின் ஒரமாக நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது, இதனால் ஆண்டு தோறும் விபத்துகள் ஏற்பட்டு பாதாசாரி பக்தர்கள் விபத்துகளில் பலியாகிவிடுகிறார்கள் இது ஆண்டுத் தோறும் அதிகாரித்து வருகிறது
இதனை தடுக்க பாதாரிசாரிகளாக நடந்துச் செல்லும் பக்தர்களுக்கு சாலையின் ஒரங்களில் நடைமேடை அமைக்க வேண்டுமெனவும் இதனால் விபத்துகளில் பக்தர்கள் பாதிக்கபடுவதை தடுக்க முடியும் இதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
You must be logged in to post a comment.