பாலக்கோடு பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் கட்டு யாணையால் பொதுமக்கள் பீதி…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் காப்பு காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யாணை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவினால் காடுகள் மற்றும் அணைகள், ஏரிகள் என வறண்டு கடும் வறட்சி நிலவி வருகின்றது. காடுகளில் இருக்கும் வனவிலங்குகள் யாணை, மான், முயல், காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் என தண்ணீயின்றி வனவிலங்குள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

மகேந்திரமங்கலம் காப்பு காட்டில் இருந்து ஒற்றை ஆண் யாணை தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டில்  தண்ணீர் குடித்தும், சூட்டை தணிக்க தன்மீது தண்ணீரை பீச்சு அடித்தும் வருகின்றது. மேலும் ஒற்றை  ஆண் யாணை ஜக்கசமுத்திரம், மல்லாபுரம், ஆத்துக்கொட்டாய் வழியாக கோட்டூர் காப்பு காட்டிற்க்கு பாலக்கோடு வனத்துறைனர் விரட்டியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் காட்டுப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து தரவேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி