இராமநாதபுரம் அருகே காமன்கோட்டை அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் முன்னாள் மாணவர் கூட்டமைப்பு அர்ப்பணிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் காமன் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளி முன்னாள் மாணவர் கூட்டமைப்பு சார்பில் துவக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அர்ப்பணிப்பு, 10, +2 பொதுத் தேர்வு களில் 100 சதவீத தேர்ச்சிக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு, மரக்கன்றுகள் நடுதல், போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பி.மாரி தலைமை வகித்தார். காமன் கோட்டை கிராம சபை தலைவர் எஸ்.என்.ராமசுப்பு, காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு) எம்.ராஜா முகமது, கிராம சபை துணை தலைவர் ஆர்.எஸ். ராமன், தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் வி.சேதுராமன் முன்னிலை வகித்தனர்.

கடந்தாண்டு 10, +2 பொது தேர்வுகளில் காமன் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சிக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பி.சந்திரசேகரன் பரிசு வழங்கினர். ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைய நிதி உதவியோரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எல். நாகேஸ்வரன் பாராட்டி பரிசு வழங்கினார். கல்வியில் சிறந்த மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு சத்திக்குடி காவல் ஆய்வாளர் சு. சாமுவேல் ராஜ்குமார், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.சாவித்ரி, ஜி.மேகலா பரிசு வழங்கினர். ஸ்மார்ட் வகுப்பறைகளை இந்தோனேஷியா சக்தி இன்ஜினியரிங் செயல்பாட்டு இயக்குநர் கே.திருமுருகன், தமிழ்நாடு சிவில் சப்ளை கர்ப்பரேஷன் பொது மேலாளர் என்.காளிதாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். காமன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உ.பால் கண்ணன், நாகர்கோவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வி. காளிமுத்து, வி.அனு மையா, புதுக்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ. முத்துச்சாமி, காமன் கோட்டை துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க.சேகரன், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் என்.தேன்மொழி, வழக்கறிஞர் சா. பாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் இரா.பாண்டியன், சென்னை தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் சி.அன்பு குமார், மதுரை காமராஜ் பல்கலை கழக பேராசிரியர் வி.ரமேஷ், காமன் கோட்டை ஊராட்சி செயலாளர் சி. பத்மநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜி. விஜயலட்சுமி சுதாகர், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகி இரா.ராஜ்குமார் பாரதி, ஆசிரியர் மாரிச்சாமி தீயணைப்புத்துறை வீரர் ஏ.பாதாள பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..