திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வாக்குகள் கேட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் நூத்துலாபுரம் கிராமத்திற்கு ஓட்டு சேகரிக்க சென்றார்.
அச்சமயம் பொதுமக்கள் எங்களது பகுதியில் குடிநீர், தார்சாலை, கழிவு நீர், வாய்க்கால் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தாரத அரசியல்வாதிகளும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் யாரும் உள்ளே வரக்கூடாது என்று கூறி ஒட்டு கேட்டு வந்த தி மு க வேட்பாளருக்கு தூத்துலபுரம் ஊர் பொதுமக்கள் ஊருக்க்குள் நூழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த பெண்கள் உள்பட அனைவரும் ஒரே கோரிக்கையான ஓட்டு கேட்டு வரக்கூடாது என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment.