மதுரையில் முறையான பயிற்சி இல்லாமல் பேரூந்தை இயக்கும் ஓட்டுநர்கள்..

மதுரை மூலக்கரை கோபால்சாமி திருமண மண்டபம் அருகே போக்குவரத்து நெரிசல் இடையில் திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் வாகன எண் tn 58 n 23 23 என்கின்ற அரசு பேருந்து கார் மீது உரசிவிட்டு  நிற்காமல் சென்றுள்ளது.

பின்னர் அந்தக் பேருந்தை அங்குள்ள பொதுமக்களும் காவல்துறையை சேர்ந்த ஒருவரும் துரத்திப்பிடித்த பின்  சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத ஓட்டுனர் என அதிர்ச்சியான தகவலை அவரே தெரிவித்தார்.

இது போன்ற பயிற்சி இல்லாமல் ஓட்டும் பொழுது மிகப் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுவாக திருமங்கலம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் பயிற்சிகள்  இல்லாத ஓட்டுனர்கள் அதிகம் இருப்பதாக தகவல் தெரிய வருகிறது, இதன் காரணமாகவே  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.  மேல் விபரங்களுக்கு +919487599033 என்ற திருமங்கலம் அரசு போக்குவரத்து கழக மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

செய்தி வி.காளமேகம், மதுரை