Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடி: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி எல்இடி வாகன பிரசாரம்..

தூத்துக்குடி: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி எல்இடி வாகன பிரசாரம்..

by ஆசிரியர்

வரும் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை குறித்து வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்இடி வாகன பிரசாரம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் துவங்கியது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயன், துக்கி சயாம் பேயிக், ஆகியோர் பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, முன்னிலை வகித்தார். பின்பு மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதற்கு பின்னர் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெறும்.நேற்றைய தினம் ஒரு வேட்பாளர் அவரது வேட்புமனு வாபஸ் பெற்றுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதலாக ஒரு LED திரையுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சார வாகனம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி பழைய காய்கறி மார்க்கெட் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை துவக்கி வைத்தார்கள். இந்த வாகனம் மூலம் தினந்தோறும் 9 இடங்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பபடுகிறது. வாக்குபதிவு நாள் முன்தினம் வரை இந்த வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்களிக்கும் நாள் மற்றும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் துவக்கிவைக்கப்பட்டது.

இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மூலம் இதுவரை ரூ. 85 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயன், துக்கி சயாம் பேயிக், ஆகியோர்கள், மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, முன்னிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதன் மூலம் 60 வார்டுகளில் உள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, 100 சதவீதம் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிப்போம் மற்றும் தேர்தல் நாள் 18.04.2019 என்ற வாசனங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் வீடுகளில் ஒட்டும் பணிகளை துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், உதவி ஆட்சியர் பயிற்சி அனு, நிர்வாக பொறியாளர் (தூத்துக்குடி மாநகராட்சி) ரூபன் சுரேஷ் பொன்னையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நி.சையத் முஹம்மத், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!