தூத்துக்குடி M P தொகுதியில் இயக்குநர் கவுதமன் போட்டி..

தூத்துக்குடி M P தொகுதியில் இயக்குநர் கவுதமன் போட்டி : “தமிழ் பேரரசு கட்சி சார்பில் போட்டியிடுவேன்”  என தூத்துக்குடியில் பேட்டி.

இன்று தூத்துக்குடி வந்திருந்த திரைப்பட இயக்குனரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான கவுதமன் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் பல்வேறு கட்ட   ஆலோசனைகளுக்குப் பிறகு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தூத்துக்குடியின் மக்கள் நலனுக்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதாக முடிவெடுத்துள்ளோம்

தேர்தலுக்கு மனு தாக்கல் செய்வதற்க்கு  முன்னர் முறையான அறிவிப்பு வெளியாகும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆதரவில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில்  சென்னையில் அல்லது தூத்துக்குடியில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அதிகபட்சம் தூத்துக்குடி யிலேயே மக்கள் முன்னிலையில் தேர்தல் அறிவிப்பினை வெளியிடுவோம். தமிழக மக்கள் எங்களுக்கு தேர்தலில் பொருளாதார செலவுக்கு உதவ வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அழைத்து வந்தவர்களும் திறந்து வைத்தவர்களும் இன்று தேர்தல் மூலம் வந்துள்ளனர்.

நாட்டில் இருக்கும் 99 சதவீத கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை இடம் பணம் வாங்கி உள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வரும் துணை முதல்வரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  இதில் சம்பந்தப்பட்டவர்களை மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்

#Paid Promotion