எக்ககுடி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகம் சார்பாக முழுவீச்சில் சுகாதாரப் பணிகள்..

தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், கடந்த வாரம் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் எக்குடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எக்குடி கிராமத்தில் தற்பொழுது நிலவும் தூய்மையின்மையை பற்றி ஜமாத் தலைவர் விரிவாக அரசு சுகாதார துறை மற்றும் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துரைத்தார்.

அதிலும் முக்கியமாக எக்குடி கிராம ஊரணியை சுற்றி குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் பல வருடங்களாக அகற்றப்படாமல் இருந்து வரும் சூழலில் அதிலிருந்து ஊர் பொதுமக்களுக்கு பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதை எடுத்துரைத்து, சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட அதிகாரிகளை நேரில்அ ழைத்து சென்று நிலைமையை விவரித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று 19.10.2017 காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனைத்து குப்பைகளையும் அகற்றும் பணி ஜமாஅத் பிரதிநிதிகள் சிராஜுதீன், அஸ்கர் அலி, சகுபர் சாதிக் மற்றும் ஊராட்சி செயலர் சண்முகவேலு முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்ட சுகாதார துறைக்கு எக்ககுடி முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வீதிகளில் கொசு மருந்து (FOGGING ) புகை அடிப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது, அதை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

இந்த பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் எக்குடி முஸ்லிம் ஜமாஅத் மற்றும் கிராம பொதுமக்கள் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியதாகும்.