
கீழக்கரையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரயான் என்ற சிறுவன் நாய் கடித்து இறந்ததை தொடர்ந்து நகராட்சியால் நாய் பிடிக்கும் பணி துவங்கியது. பின்னர் சில வாரங்கள் கழித்து முழுமையடையாமலே பணிகள் நிறுத்தப்பட்டது.
பின்னர் சில மாதங்களில் பெண்மணி ஒருவர் நாய்கடிக்கு ஆளானார். சில வாரங்களுக்கு முன்னர் வெறி நாய்களால் ஆடுகள் நாய்களால் குதறப்பட்டது. அதைத் தொடர்ந்து கீழக்கரை சமூக ஆர்வலர்கள் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் புகார் மனுக்களை தொடுத்தனர்.
இந்நிலையில் இன்று (20-10-2017) முதல் மூன்று நாட்களுக்கு நாய் பிடிக்கும் பணி தொடரும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் தெரு பகுதியில் நாய்கள் தொந்திரவு இருந்தால் உடனடியாக நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் என்பவரை 9840909198 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
You must be logged in to post a comment.