Home செய்திகள் இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் பாம்பனை சேர்ந்த செய்யது உமர்கான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் பாம்பனை சேர்ந்த செய்யது உமர்கான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தைக்கா தெருவைச் சேர்ந்த செய்யது உமர்கான்( 64) சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 15.07.2019 அன்று மரணமடைந்தார்.தகவல் அறிந்த அவரது குடும்பத்தார் துபாயில் இருந்து விடுமுறைக்கு ஊர் வந்த சோஷியல் ஃபோரம் உறுப்பினர் சதாமிடம் தகவல் கொடுக்கவும் அவர் உடனடியாக சவூதி அரேபியா அல்கோபார் ரிஸ்வான் மூலம் ஜமீலுக்கு தெரிவித்து ஜமீல்இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா கிளை தலைவர் ஜின்னாவை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை அங்கேயே நல்லடக்கம் செய்யுமாறு இறந்தவரின் குடும்பத்தார் கேட்டுக் கொள்வதாக கூறினார்.

இறந்தவரின் மனைவி லத்தீபா பீவி மற்றும் ரியாதில் இருக்கும் அவரது மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலோடு இறந்தவரின் உடலை பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் சட்ட ரீதியாக மேற்கொண்டார் ஜின்னா.சவூதி அரசின் அனைத்து வகையான சட்ட பணிகளும் நிறைவு பெற்று இன்று மாலை இறந்தவரின் உடலை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர் அதிகாரிகள்.

இன்று(28.08.2019) மாலை 7 மணிக்கு அல்ஹஸ்ஸாவில் உள்ள சல்ஹியா பள்ளி மையவாடியில் செய்யது உமர்கான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது; இந்நிகழ்வில் இறந்தவரின் மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு துஆ செய்தனர்.கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சித்து இறந்தவரின் உடலை பெற்று நல்லபடியா அடக்கம் செய்துள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் கிளைத்தலைவர் ஜின்னா மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இறந்தவரின் மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய,மாநில நிர்வாகிகள் பாராட்டும்,நன்றியும் தெரிவித்தனர்.

தகவல்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!