Home செய்திகள் பொறாமை இன்றி வாழ்தல் வேண்டும் டி .எஸ்.பி.பேச்சு

பொறாமை இன்றி வாழ்தல் வேண்டும் டி .எஸ்.பி.பேச்சு

by mohan

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை டி.எஸ்.பி.மோகன் தம்பி ராஜன் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் .சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சர் ஆனவர்.உழைப்பு,விடாமுயற்சி உடையவர் .அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.இவ்வாறு பேசினார்.காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளிலவெற்றிபெற்றமாணவர்கள் சபரீஸ்வரன், அட்சயா ,யோகேஸ்வரன்,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ, மகாலெட்சுமி, சபரி,நதியா,ஈஸ்வரன்,கிருத்திகா ஆகியோருக்கு தேவகோட்டை டி.எஸ்.பி.மோகன் தம்பி ராஜன் பரிசுகளை வழங்கினார். நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!