Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பால்வளத்துறை அமைச்சர் சார்பாக அம்மா உணவத்தில் இலவச உணவு வழங்க நன்கொடை…

பால்வளத்துறை அமைச்சர் சார்பாக அம்மா உணவத்தில் இலவச உணவு வழங்க நன்கொடை…

by ஆசிரியர்

4 ஆம் கட்ட ஊரடங்கின் போது அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் 10,92,000 ரூபாயை ஆட்சியரிடம் வழங்கினார்.

கரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான தொழில்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பலர் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் மே 18 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்க 10,92,000 ரூபாய் அதிமுக சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினார். இதுவரை பால் வளத்துறை அமைச்சர் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 30,44,000 ரூபாய் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்க அளித்து உள்ளனர். இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் அம்மா உணவகத்தின் மூலம் 3 நேரமும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராஜேந்திரபாலாஜி
தற்போது மூன்றாவது முறையாக பொது மக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் அம்மா உணவகங்களில் இலவச உணவு பயன் பெற்று வந்து உள்ளனர்.

புரட்சி தலைவிஅம்மா அம்மா உணவகம் செயல்படுத்தபட்டதின் முக்கிய நோக்கமே ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவிற்கு கூட கஷ்டப்படுகிற மக்களின் பசியை போக்குவதற்குத்தான் செயல் படுத்தப்பட்டது என்றார். விருதுநகர் மாவட்டத்தில் 8 அம்மா உணவகங்களில் மே 18-ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்கிட அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!