Home செய்திகள் உசிலம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் பலி.

உசிலம்பட்டியில் வெறிநாய்கள் கடித்து இரண்டு ஆடுகள் பலி.

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பனை மரத்து பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராவணண்(47).கறிக்கடை வைத்துள்ளார்.வரும் தீபாவளி நேரம் என்பதால் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்வதற்காக வெளியூரிலிருந்து 3 ஆடுகளை வாங்கி தனது உறவினர் வீட்டின் அருகிலுள்ள காலியிடத்தில் கட்டி வைத்து கேட்டை பூட்டியுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு உசிலம்பட்டிப் பகுதியில் நல்ல பெய்துள்ளது.நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.ராவணனின் உறவினர் கடைக்கு ஆடுகளை வெட்டுவதாக நினைத்து வெளியே வந்து பார்க்காமல் தூங்கியுள்ளார்.ராவணன் அதிகாலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.இது குறித்து ஆராய்ந்த போது மழைக்கு பூட்டியிருந்த கேட்டின் கீழ் பகுதியில் வழியாக உள்ளே நுழைந்த வெறிநாய்கள் கடித்து 2 ஆடுகள் பலியானது தெரிய வந்தது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நேரில் சென்று ஆடுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களை அணுகாமல் ஆடுகளை குப்பைகளோடு குப்பைகளாக சேர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இறந்த ஆட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாமல் சென்று விட்டனர். இதனால் ராவணன் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு ஆளாகி உள்ளனர். 

மேலும் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் வெறி நாய்கள் அதிகம் சுற்றி திரிவதாகவும் அதனை பிடித்து செல்ல வேண்டுமென பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இதே பாண்டி கோவில் தெருவில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்ததில் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் இன்று அதே பாண்டி கோவில் தெருவில் இரண்டு ஆடுகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.இது குறித்து; தமிழக அரசு உசிலம்பட்டி பகுதியில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!