Home செய்திகள் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை:  இராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு..

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை:  இராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.7- அரசு அங்கீகரித்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என பொய் தகவல் பரவி வருகிறது. இன்றும் பல்வேறு கிராம பகுதி கடைகளில் 10 ரூபாய் நாணயம் ஏற்க மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

நாட்டின் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு டிசைன்கள், வடிவங்கள் அளிக்கப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு டிசைன் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் பழக்கத்தில் இருப்பது இயல்பானது. இந்திய அரசு அங்கேரித்த 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது இதுவரை பதினான்கு வகை 10 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளது, ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து டிசைன் வாரியாக மாறுபட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம்(z) இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம்(z) இருக்காது. எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல 10 ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும் அவை செல்லாது என்றும் பல வதந்தி மக்களிடையே காணப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களின் தொலைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி, அழைப்புகள் விடுத்து அதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மேலும் வகை 10 ரூபாய் நாணயம் பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவையயை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுவருகிறது. இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயம் செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124A ன் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரித்த நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை. அபராதம் வழங்கப்படும். இந்திய அரசு அங்கீகரித்த நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் அரசால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலும் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன். தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!