Home செய்திகள் தென்காசியில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்..

தென்காசியில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்..

by ஆசிரியர்

தென்காசியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் அரசாணை GO: 293 ஐ நடைமுறைப் படுத்தக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசாணை GO: 293 (dt 18.06.21) ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டியும், அவ்வரசாணையில் அறிவிக்கப்பட்ட உரிய Allowances & Increments ஐ அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தியும் அரசு மருத்துவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 28.08.2023 காலை முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள் தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் இணை இயக்குனரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அரசு டாக்டர் சங்க தென்காசி மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான டாக்டர் ஜெஸ்லின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மருத்துவர் செந்தில் சேகர் மற்றும் மருத்துவர் முகம்மது இப்ராகிம் முன்னிலையில், மருத்துவர்கள் ராஜலட்சுமி, ராஜ்குமார், எஸ்.எஸ். ராஜேஷ், கீதா புனிதவதி, கிருஷ்ணன், செல்வ பாலா, திருமலைக் குமார், ராம்சுந்தர், மாரிமுத்து, பழனிகுமார், நாகஜோதி, மணிமாலா மற்றும் சுமார் 30 தென்காசி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடனடியாக ஆணைகளை பரிசீலித்து பண பலன்களை பெற்றுத் தருமாறு இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதாவிடம் குறிப்பானையும் வழங்கப்பட்டது.

மேலும் இது குறித்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊதிய உயர்வு வேண்டி நான்காண்டு காலமாக நடத்திய பலகட்ட போராட்டங்களின் பலனாக, அரசாணை: 293 (G.O.(Ms). No: 293, Health and Family Welfare (A1) Department dated 18.06.2021) வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும்,  இன்னும் அமலுக்கு வராமல் உள்ளது. கொரோனா பெருந்தொற்று, இயற்கை இடர்பாடுகள் என அரசு மருத்துவர்களின் சவாலான பணித் தன்மையை கருத்தில் கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதல்வர் பதவியேற்ற சில நாட்களிலேயே மேற்படி அரசாணையை வெளியிட்டார். இருப்பினும், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி அரசு மருத்துவர்களின் காலமுறை சார்ந்த ஊதிய உயர்வு தொடர்பான ‌கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், மேற்படிப்பு, பணியிட சவால் போன்றவற்றை கருத்தில் கொண்டு Allowances & Increments வழங்கும் மேற்படி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இவ்வரசாணையை அமல்படுத்த பல்வேறு நிலைகளில், பல மாவட்டங்களில், பலமுறை வலியுறுத்தியும் இரண்டாண்டுகள் ஆகியும் இது நாள் வரை யாருக்கும் உரிய பணப்பலன்கள்‌ கிடைக்கவில்லை. இது தொடர்பாக வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில், மேற்படி அரசாணையின் படி நிலுவைத் தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. சில மருத்துவர்கள் அரசாணை GO:354ஐ அமல்படுத்த வலியுறுத்தியும் அரசாணை GO:293 எதிர்த்தும் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், உயர் நீதிமன்றம் எதிர்ப்பாளர்கள் உட்பட அனைவரும் இப்போது உடனடியாக கிடைக்கக்கூடிய பணப்பலன்களை பெற்றுக் கொண்டு விருப்பமான ‌கோரிக்கைகள் நிறைவேற தொடர்ந்து ‌போராடலாம் என தனது உத்தரவில் கூறியுள்ளது. அதோடு, தமிழ்நாடு அரசும், வழக்கு தொடர்பாக அளித்துள்ள அபிடேவிட்டில் அரசாணை 293 யை நிறுத்தி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ‌என்று உறுதியளித்துள்ளது. இத்தகைய சூழலில், அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாக ‌கிடைத்திட GO 293 மற்றும் உயர்நீதிமன்ற ஆணையை உடனடியாக செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் 28.08.2023 காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!